close
முகப்பு கதிராமங்கலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

 கதிராமங்கலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

August 13, 2017 73Views
 கதிராமங்கலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கதிராமங்கலம் கிராமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட மீத்தேன், ஷேல் வாயுவை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எடுக்கவில்லை என்றும் அந்நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சென்னை பேசின் மேலாளர் ராஜேந்திரன், கதிராமங்கலம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும், எண்ணெய் வளங்கள் இருக்கும் இடத்தில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

கதிராமங்கலம் கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர்கள் கூறினார். 

ஓ.என்..ஜி.சி. நிறுவனத்தால் ஆண்டுதோறும் இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் அந்நிய செலாவனி செலவினங்கள் மிச்சப்படுத்தப்படுவதாக ராஜேந்திரன் தெரிவித்தார்.