close
முகப்பு காவல் நிலையத்தில் கெரஸின் குண்டு வீச்சு : தனிப்படை மூலம் விசாரணை 

 காவல் நிலையத்தில் கெரஸின் குண்டு வீச்சு : தனிப்படை மூலம் விசாரணை 

July 14, 2017 105Views
 காவல் நிலையத்தில் கெரஸின் குண்டு வீச்சு : தனிப்படை மூலம் விசாரணை 

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, தனிப்படை மூலம் விசாரணை  நடைபெற்று வருவதாக முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், வேளாங்கன்னி பகுதியில் மணல் வெள்ளை திட்டு கலப்பதால் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்றும் சட்டமன்ற உறுப்பினர் மதிவானன் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதற்கான நிதி ஒதுக்கிய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

 இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், தனிப்படை அமைத்தும், சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரை கைது செய்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  தெரிவித்தார். இதன் பின்னர் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் ராமசாமி, சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.