close
முகப்பு தமிழக மக்கள் நன்றாக இருக்க அரசை உடனே கலைக்க வேண்டும் : ஸ்டாலின்

 தமிழக மக்கள் நன்றாக இருக்க அரசை உடனே கலைக்க வேண்டும் : ஸ்டாலின்

August 13, 2017 88Views
 தமிழக மக்கள் நன்றாக இருக்க அரசை உடனே கலைக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மாநில அரசை கலைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தன்னை பொறுத்தவரை பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ யாராக இருந்தாலும் கவலையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து வரும் 20ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.