close
முகப்பு பாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

 பாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

December 06, 2017 115Views
 பாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு  தமிழக, ஆந்திர எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள தமிழக,  ஆந்திர எல்லை பகுதியான  கிருஷ்டியான் பேட்டை பகுதியின்  போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடமைகள் சோதனையிடும் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.