close
முகப்புஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் உள்ளூர் வீரர் முதலிடம்

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் உள்ளூர் வீரர் முதலிடம்

July 17, 2017 63Views
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் உள்ளூர் வீரர் முதலிடம்

இங்கிலாந்தில் நடைபெற்ற 10-வது சுற்றுக்கான ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் உள்ளூர் வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். இந்த சீசனில் அவரின் 4வது வெற்றி இதுவாகும்.

நடப்பு ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரிக்ஸ், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன்  பந்தய தளத்தில் நேற்று 
நடத்தப்பட்டது. இந்த போட்டியின்  பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

போட்டி தொடங்கியதும் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கார்களில் சீறிப்பாய்ந்தனர். இதில், உள்ளூர் நாயகனும், மெர்சிடஸ் வீரருமான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 21 நிமிடம் 27.43 வினாடிகளில் இலக்கை கடந்து 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். 

இந்த சீசனில், ஹாமில்டனின் 4வது வெற்றி இதுவாகும். அத்துடன், பிரிட்டிஷ் கிராண்ட்பிரிக்ஸில் அவரின் 5வது வெற்றியாக இது அமைந்தது. இவருக்கு அடுத்த படியாக, மற்றொரு மெர்சிடஸ் வீரர்  ஃபின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் (Valtteri Bottas) 2-வதாக பந்தைய தூரத்தை கடந்து 18 புள்ளிகளைப் பெற்றார். 3வதாக வந்த ஃபெராரி வீரர் ராய்க்கொனன் (Raikkonen) 15 புள்ளிகளைப்பெற்றார்.  

முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதுவரை நடந்துள்ள 10 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெட்டல் 177 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 176 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 154 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கின்றனர். அடுத்த சுற்றுப்போட்டி ஹங்கேரியில் வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது.