close
முகப்புஅசாம் மாநிலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ள பெருக்கு

அசாம் மாநிலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ள பெருக்கு

August 13, 2017 101Views
அசாம் மாநிலத்தில் அபாய அளவை தாண்டி வெள்ள பெருக்கு

அசாம் மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், பக்ஸா, சிராங் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 781 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 

பிரம்மபுத்திரா, தன்சிரி, ஜியா பராலி ஆகிய நதிகளில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். விளைநிலங்களில் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 14 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மாநில முதல்வர் சர்பானந்தா சோனவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.