close
முகப்புஅசாம் மாநில வெள்ளம்:  பலியானோர் எண்ணிக்கை 60- ஆக உயர்ந்தது

அசாம் மாநில வெள்ளம்:  பலியானோர் எண்ணிக்கை 60- ஆக உயர்ந்தது

July 17, 2017 92Views
அசாம் மாநில வெள்ளம்:  பலியானோர் எண்ணிக்கை 60- ஆக உயர்ந்தது

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக அசாமின் லக்கிமிப்பூர், கோலாகாட், கரீம்கஞ்ச் உள்ளிட்ட 24 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க 200 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. 

காசிரங்கா தேசிய உயிரினப் பூங்கா முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மாநில அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளும், அத்தியவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்குப் போதுமான எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.