close
முகப்புஅடுத்த ஆண்டிற்கான உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

அடுத்த ஆண்டிற்கான உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

December 06, 2017 196Views
அடுத்த ஆண்டிற்கான உயர்நீதிமன்றத்தின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டிற்கான விடுமுறை தின பட்டியலை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் 2018-ம் ஆண்டில் மே 1 முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர்   13 முதல் அக்டோபர் 21ம் தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 22-முதல் டிசம்பர் 31ம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதி பொங்கல் பண்டிகைக்காகவும், ஜனவரி 26  குடியரசு தினத்திற்காகவும், மார்ச் 29-முதல் மகாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30வரை புனித வெள்ளிக்காக. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 30 நீதிமன்ற விடுமுறை என்றும்,  மே 1 மேதினத்திற்காகவும், ஜூன் 15 ரமலான் பண்டிகைக்காகவும், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்டு 22 பக்ரீத் விடுமுறை.  செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி, செப் 21 மொகரம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காகவும், அக்டோபர் 18 & 19 ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிகாக விடுமுறை அறவிக்கபட்டது.

நவம்பர் 5 உயர்நீதிமன்ற விடுமுறை, நவம்பர் 6 தீபாவளி, நவம்பர் 7 நீதிமன்ற விடுமுறை. நவம்பர் 21 மிலாது நபி, டிசம்பர் 25 கிருத்துமஸ் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்திற்கு எல்லா சனி, ஞாயிறு கிழமைகளும் விடுமுறை.  வரும் 2018-ம் ஆண்டில்  பொங்கல், தெலுங்கு மற்றும் தமிழ் வருட பிறப்புகள்  ஆகிய பண்டிகைகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருவதால் உயர் நீதிமன்ற விடுமுறை கால பட்டியலில் இந்த பண்டிகைகள் இடம்பெறவில்லை.