close
முகப்புஅடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்

அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்

அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம்

அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்றான சாக்லேட்டில் இனிப்பு சுவை இயற்கையில் கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு சாக்லேட் செய்யப்படுகிறது. கொக்கோ மரங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காணப்படுகின்றன. ஐவரி கோஸ்ட் மற்றும் கானா ஆகிய இரு ஆப்பிரிக்க நாடுகளில் கொக்கோ மரங்கள் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘உலகின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே செல்வதாகவும், அடுத்த 30 ஆண்டுகளில் 2 புள்ளி 1 செல்சியஸ் வெப்பநிலை கூடும் என்பதால் சாக்லேட் உற்பத்தி அதிக அளவு பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை என்பதால், அடுத்த 30 ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பருவ மாற்றங்களினால் பல்வேறு மரங்கள் அழிந்துள்ளன. அந்த வரிசையில் கொக்கோ மரங்களும் இடம்பெற உள்ளது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது