close
முகப்புஅதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் 12,13,14,15 ம்  தேதி நான்கு  நாட்கள் அரசு விடுமுறையாக இருப்பதால் , விடுமுறைக்காக சொந்த ஊர் செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் பொது மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அதிமான டிக்கெட் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் குறித்து 18004256151 இந்த கட்டணமில்லா தொலைப்பேசியில், தொடர்பு கொண்டு  புகார் தெரிவிக்கலாம் என்று தெரவித்துள்ளார். பயணிகளின் வசதிக்காக அரசுப்பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட உள்ளன. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து மேலும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.