close
முகப்புஅந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னடைவு அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னடைவு அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு

July 17, 2017 71Views
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னடைவு அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக அதிமுக அரசு கூறி வரும் நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சம்பத், தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறியதை தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தோல்வியடைந்து விட்ட தமிழக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் குவிந்து வருவதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒருவேளை தமிழக அமைச்சர்கள் கூறுவது உண்மை என்றால் அதற்கான ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன, எவ்வளவு பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.