close
முகப்புஅரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ராமதாஸ் வலியுறுத்தல்

October 12, 2017 162Views
அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பதாகவும், இதேநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படும் போது  குறைந்தபட்ச ஊதியத்திற்கும், அதிகபட்ச ஊதியத்திற்கும் வேறுபாடு குறைய வேண்டுமே தவிர அதிகரிக்கக்கூடாது என்று கூறினார். ஆனால், தற்போது இடைவெளி அதிகரித்திருப்பதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்த ராமதாஸ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை தொகையை, தவணை முறையிலாவது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.