close
முகப்புஆண்டாள் குறித்த கருத்து : வைரமுத்து விளக்கம்

ஆண்டாள் குறித்த கருத்து : வைரமுத்து விளக்கம்

January 09, 2018 370Views
ஆண்டாள் குறித்த கருத்து : வைரமுத்து விளக்கம்

ஆண்டாள் குறித்த கருத்துகளால் யாரும் புண்பட்டிருந்தால் வருந்துவதாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் பற்றி பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 

அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியை வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்ததும் சர்ச்சை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், இந்து மதத்தை வைரமுத்து அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், விளக்கமளித்துள்ள வைரமுத்து, ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்தையே மேற்கோள் காட்டியிருந்ததாகவும், ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து விளக்கமளித்துள்ளார். 

ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் தனது கருத்துகள் ஆண்டாளின் பெருமைகளையே பேசுவதை அனைவரும் அறிவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாரையும் புண்படுத்துவது தனது நோக்கமன்று என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து புண்பட்டிருந்தால் வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.