close
முகப்புஆந்திராவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்கள் கைது

ஆந்திராவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்கள் கைது

July 14, 2017 64Views
ஆந்திராவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றவர்கள் கைது

ஆந்திராவில்,  புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் உள்ள வெங்கடேஷ்வரா நகரில் ரத்து செய்யப்பட்ட பழைய 500 மற்றும் அயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் கும்பல் இருப்பதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து  டி.எஸ்.பி மல்லிகார்ஜுன தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் நோட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக இந்துப்பூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் அஞ்சநேயலு உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த மனோகர் என்பவர் மூலம் கமிஷன் முறையில் இந்த பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்