close
முகப்புஆந்திராவில் வைர படிவங்கள் கொண்ட புதையல் கண்டுபிடிப்பு

ஆந்திராவில் வைர படிவங்கள் கொண்ட புதையல் கண்டுபிடிப்பு

ஆந்திராவில் வைர படிவங்கள் கொண்ட புதையல் கண்டுபிடிப்பு

ஆந்திராவில் கர்னூல் மாவட்டம்  சென்னம்பள்ளியில்  கோட்டை ஒன்று உள்ளது. திம்மராஜா என்பவர் 100 ஏக்கர் பரப்பளவில் மலையை குடைந்து இக்கோட்டையை கட்டியதாக கூறப்படுகிறது. கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரியங்கள் அடங்கிய புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த புதையலை எடுக்க பலரும் முயற்சி செய்த வந்தனர். இந்நிலையில் தொல்லியியல் துறை அதிகாரிகள் கோட்டையில் புதையல் இருப்பதாக கண்டறிந்து ஆந்திர மாநில அரசுக்கு தெரிவித்தனர்.  இதனை அடுத்து கோட்டை உள்ள மலையில் மேல் பகுதியில் இருந்து 12 மீட்டர் வரை வைர படிவங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கனிமவளத்துறையின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.