close
முகப்புஆருஷி கொலை வழக்கில், கொலையாளிகள் யார்? சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கேள்வி..

ஆருஷி கொலை வழக்கில், கொலையாளிகள் யார்? சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கேள்வி..

October 13, 2017 268Views
ஆருஷி கொலை வழக்கில், கொலையாளிகள் யார்? சமூக வலைத்தளங்களில் வலுக்கும் கேள்வி..

ஆருஷி கொலை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், கொலையாளிகள் யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஆருஷி, நேபாளத்தைச் சேர்ந்த வீட்டு உதவியாளர் ஹேம்ராஜ் ஆகியோர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இது கவுரவ கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், ஆருஷியின் தந்தை மருத்துவர் ராஜேஸ் தல்வார், அவரது மனைவி நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு  காசியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

அதே நேரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இருவரும் கொலையாளிகள் என்பதற்கு சூழல் ஆதாரங்கள் மட்டுமே இருப்பதாகவும், வழக்கில் மர்மங்கள் நிறைந்துள்ளதாகவும் கூறியது.  இந்நிலையில் சந்தேகத்தின் பலனை குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அளித்து, இருவரையும் விடுவித்து நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த தீர்ப்பை ஆருஷியின் உறவினர்கள் என  பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே நேரம் அவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் அதனைச் செய்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 நீதிமன்றங்கள் ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல் தங்களது சொந்த விசாரணையை வைத்து தீர்ப்பு வழங்கி வருவததை இந்த தீர்ப்பு காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.  

இந்த வழக்கின் உண்மை வெளிவரப்போவதில்லை என ஊடகவியலாளர் பர்க்கா தத் கூறியுள்ளார்.