close
முகப்புஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்: மு.க.ஸ்டாலின்

December 07, 2017 144Views
ஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி முறையாக நடக்க வேண்டும் என்று விரும்பினால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். 

மேலும், காணாமல் போன மீனவர்கள் பற்றி முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மாயமான மீனவர்கள் பற்றி முதலமைச்சர் ஒரு தகவலையும், அமைச்சர் மற்றொரு தகவலையும், நிர்மலா சீதாராமன் மற்றொரு தகவலையும் கூறி வருவதாக தெரிவித்தார். 

இதனையடுத்து, மாயமான மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே ஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.