close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

December 02, 2017 406Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். 

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் வதந்தி என்று பலர் மறுத்து வந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விஷாலின் இந்த முடிவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்புலமாக இருப்பதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. கொட்டி தீர்க்கும் மழையிலும் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் சூடு தணியாமல் உள்ளதே என்றே கூறலாம்