close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியா ?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியா ?

December 01, 2017 539Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியா ?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் கமல் சார்பாக விஷால் போட்டியிடுவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.

மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் மீண்டும் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் மதுசூதனனும்,  திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோரும், டிடிவி தினகரன் சுயேட்ச்சையாகவும் போட்டியிடுகிறார். இவர்கள் மூவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் கமல் அவருடைய பிறந்த நாள் அன்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது உறுதி என அறிவித்தார். கட்சியின் சின்னம், கொடி, பெயர் ஆகியவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் கமல் நடிகர் விஷாலை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.