close
முகப்புஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு

October 12, 2017 362Views
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்த நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி, காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. 

இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறுவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து, அதற்கான 29 பக்க காரணங்களையும் வெளியிட்டது. 

மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் வரும்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தது. இந்நிலையில் இன்று வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே.ஜோதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.