close
முகப்புஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி

December 07, 2017 323Views
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர். கே. நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பு மனுக்களில் 13 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.

வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின் படி ஆர். கே. நகரில் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன், கரு. நாகராஜன் உட்பட 59 பேர்  போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த பட்டியலில் விஷால் பெயர் இடம் பெறாததால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை. சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் நாளை ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே. நகர் தேர்தலில் ஒப்புகை சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.