close
முகப்புஆஷஸ் தொடர்: 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் தொடர்: 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி

December 06, 2017 290Views
ஆஷஸ் தொடர்: 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 2வது டெஸ்டில் 120 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 442ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 227ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 138 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 353 ரன்கள் வெற்றி இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, 120 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2க்கு0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.