close
முகப்புஇந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ரிக்ஷா ஓட்டுபவரின் மகனும்

இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ரிக்ஷா ஓட்டுபவரின் மகனும்

இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், ரிக்ஷா ஓட்டுபவரின் மகனும்

இந்தியாவின் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக  அன்சார் சாகிக்(21) மேற்குவங்க மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். 

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த யுனஷ் சாகிக் அஹமது ரிக்ஷா ஒட்டும் தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர் அன்சார் சாகிக்.  அன்சார்,  சிவில் சர்வீஸ் பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்து ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வாகி உள்ளார். அன்சார் நாட்டில் இளம் வயதில் தேர்வான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமையும் பெற்றுள்ளார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பலதரப்பட்ட இன்னல்களை கடந்து இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

தனது தந்தைக்கு மூன்று மனைவிகள் என்றும் அதில்  இரண்டாவது மனைவிக்கு தான் பிறந்தாக அன்சார் தெரிவித்துள்ளார். இவரது சகோதரர் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி பாதிப்பை பாதியிலே நிறுத்தி உள்ளார். புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ்(Political Science ) படித்து கொண்டே, ஐ.ஏ.எஸ் படிப்பிற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடர் முயற்சியாலும், விடாநம்பிக்கையுடன் பயிற்சி மேற்கொண்ட இவர் தனது முதல் முயற்சியிலே சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

என்னுடைய வெற்றிக்கு பயிற்சியாளர், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் உதவி புரிந்ததாக அன்சார் தெரிவித்துள்ளார்.  பொருளாதார நெருக்கடியில் பல முறை தவித்த போது நண்பர்களும், பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளாரும் எனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு  பெரிதும் உதவியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த ஒரு சிக்கலையும் தடையாக எண்ணாமல் தனது கனவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தால் அதில் எளிதில் பெறலாம் என்பதற்கு அன்சார் ஒரு முன்மாதியாக உள்ளார்.