close
முகப்புஇந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடும் பாகிஸ்தான்

இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடும் பாகிஸ்தான்

January 14, 2018 255Views
இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடும் பாகிஸ்தான்

அணு ஆயுத சண்டைக்கு தயார் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், பாகிஸ்தானின் எந்த ஒரு தாக்குதலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கு தற்போது பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இராணுவ தளபதியின் கருத்திற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா எம். ஆசிஃப், இந்திய தளபதியின் இந்த பேச்சு மிகவும் பொறுபற்றதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அணு ஆயுத சண்டை தான் இந்தியாவின் ஆசை என்றால் பாகிஸ்தானின் படையை சோதித்து பார்க்கட்டும் என்றும் அப்போது அவரின் சந்தேகம் உடனடியாக நீக்கப்படும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து, இதற்கு கருத்து கூறியுள்ள பகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் முகமது பாசில், இந்திய தளபதி ராவத்தின் இந்தப் பேச்சு, இந்தியாவின் மோசமான மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அவசியம் நேர்ந்தால் பாகிஸ்தான் தனது முழுத் திறனை காட்டும் என்றும், பாகிஸ்தான் தன்னை காத்துக்கொள்ள முழு பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.