close
முகப்புஇந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது

இந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது

October 13, 2017 124Views
இந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது

டெல்லியில் இந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை  இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்கனவே இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசு மற்றும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள், தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

மேலும், கடந்த மாதம், நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள 42 தமிழக மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் இன்று மற்றும் நாளை இந்தியா, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மீனவ பிரதிநிதிகளின் கூட்டு ஒருகிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.