close
முகப்புஇந்தியா 2018-ஆம் ஆண்டு 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் : உலக வங்கி ஆய்வறிக்கை

இந்தியா 2018-ஆம் ஆண்டு 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் : உலக வங்கி ஆய்வறிக்கை

January 10, 2018 184Views
இந்தியா 2018-ஆம் ஆண்டு 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் : உலக வங்கி ஆய்வறிக்கை

2018-ஆம் ஆண்டு இந்தியா 7.3 சதவீத வளர்ச்சி இலக்கை அடையும் என உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பொருளாதார முன்னேறம் குறித்து உலக வங்கி அளித்துள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவி்ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 2017-ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 2018-ஆம் ஆண்டில் இது 7.3 சதவீதமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 7.5 சதவீதம் உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த 10 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை எட்டும் என்றும், குறிப்பாக 2018-ஆம் ஆண்டில் தனது திறனைக் காட்டிலும் சிறந்ததை எதிர்பார்க்கலாம் எனவும் உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.