close
முகப்புஇந்திய உடனான 2-வது ஒருநாள் போட்டி: சுருண்டது தென்னாஃப்ரிக்கா

இந்திய உடனான 2-வது ஒருநாள் போட்டி: சுருண்டது தென்னாஃப்ரிக்கா

February 04, 2018 505Views
இந்திய உடனான 2-வது ஒருநாள் போட்டி: சுருண்டது தென்னாஃப்ரிக்கா

இந்திய உடனான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாஃப்ரிக்கா அணி 118ரன்களில் சுருண்டது.

இந்தியா- தென்னாப்ரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீச முடிவு செய்துள்ளது. 

அதன்படி களமிறங்கிய தென்னாஃப்ரிக்க அணியில், தொடக்க வீரர்களான ஹசீம் அம்லா 23 ரன்களிலும், டி காக் 20ரன்களிலும், ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, வந்த வீரர்கள் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில், 32.2 ஓவர்களில் தென்னாஃப்ரிக்கா 118 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 119ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.