close
முகப்புஇந்துக்களை கவரும் நாகூர் தர்கா !

இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !

December 06, 2017 372Views
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !
இந்துக்களை கவரும் நாகூர் தர்கா !

மதத்தின் பெயரால் வடக்கே வன்முறைகள் நிகழ்ந்தாலும், தெற்கு இதுவரை அமைதிப் பூங்கா தான். இதில் முன்னணியில் இருப்பது நாகை மாவட்டம். மேற்கே சிக்கல் சிங்கராவேலர் ஆலயம். தெற்கே வேளாங்கன்னி, வடக்கே திருநள்ளாறு மையபகுதியில் நாகூர் ஆண்டவர் தர்கா என அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் இடமாக உள்ளது நாகை. 

 நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை  வரவேற்று குடிசை பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. 

 சாஹாமாலிம் (பொதுமக்கள் )

நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தை கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான் . நாகூர் தர்கா இஸ்லாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துகள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக மினராக்களின் அருகில் அமைந்துள்ள உயர் மேடையில் இந்து சம்பிராதயப்படி நாதஸ்வர கர்நாடக இசை இசைக்கப்படுகிறது. 

 இராமமூர்த்தி (பொதுமக்கள் )

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும்.  நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர். 

நவ்சாத் (பொதுமக்கள் ) 

ஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் இந்து மக்களே.  மதவாதம் எனும் நோய் மக்களை நெருங்காமல் காக்கும் அரணாக விளங்குகிறது நாகூர் தர்கா என்றால் அது மிகையாகாது...

கடலூர் மாட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது ஸ்ரீமுஷ்ணம்.  இங்கு அமைந்துள்ள பூவராக சாமி திருக்கோயில் நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு  பெருமாள் வராக அவதாரத்தில்  அருள்பாலித்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த திருக்கோவிலுக்கு இஸ்லாமியர்கள் 6 ஏக்கர் நிலம் அளித்ததாக கூறுகிறார்  அங்குள்ள சிவாச்சாரியார். 

இந்த திருக்கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் புதிய வாகனங்கள் வாங்கும்போது கோவிலுக்கு வந்து விட்டுச் செல்வர் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். 
வாகனங்கள் பன்றிகள் மேல் இடித்து விபத்து ஏற்பட்டால், முஸ்லிம் கிருஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வாகனத்தை ஸ்ரீமுஷ்ணம் உள்ள பூவராக சாமி திருக்கோயிலுக்குதான் வருவார்கள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மாசி மகத்திற்கு ஆலயத்திலிருந்து தீர்த்தவாரிக்கு கிள்ளை கடற்கறைக்கு செல்லும் பூவராக சாமிக்கு கிள்ளையில் உள்ள தர்காவில்தான் முஸ்லிம்கள் சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறிப்பிடதக்கது. 

கோவிலுக்கு வரும் சாலையில் ஏராளமான பள்ளிவாசல்கள் இருப்பதாகவும், ஆனால் இதுவரை மத ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.