close
முகப்புஇன்று தொடங்கவுள்ளது  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

இன்று தொடங்கவுள்ளது  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

July 17, 2017 86Views
இன்று தொடங்கவுள்ளது  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

பரபரப்பான அரசியல்  சூழ்நிலைகளுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. 

இக்கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எல்லை பிரச்சனை, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை,  என புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு குடியரசு மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடைபெற இருப்பதால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 

ஜூலை 17-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இரு அவைகளிலும் 16 மசோதாக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.