close
முகப்புஇயற்கையே இயற்கையை காப்பாற்றிய வினோதம்!

இயற்கையே இயற்கையை காப்பாற்றிய வினோதம்!

January 09, 2018 178Views
இயற்கையே இயற்கையை காப்பாற்றிய வினோதம்!

கனமழை பொழிவால் கலிஃபோர்னிய காட்டுத்தீ முழுவதுமாக அணைந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகிறது. 

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா வனப் பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. தீயை அணைப்பதற்கு மீட்புக்குழுவினர் கடுமையாக போராடி வந்த நிலையில், அதிவேக புயலுடன் கூடிய திடீர் கனமழை பொழிந்ததால் எறிந்துகொண்டிருந்த காட்டுத்தீ முழுவதுமாக அணைந்தது.

பல நாட்கள் அனல் காற்று வீசி வந்த பகுதியில் தற்போது குளிர் காற்று வீசி வருவது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது. புகை மேகம் கலைந்துள்ளதால் சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தீக்கிரையான பகுதிகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் திடீர் குட்டைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவாறு வட கலிஃபோர்னிய வனப்பகுதி காட்சி அளிக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் கலிஃபோர்னிய காட்டுத் தீ மிக மோசமான இயற்கை பேரிடராகக் கருதப்படுகிறது. இந்த மாபெரும் இயற்கை அனர்த்தத்தில் 44 பேர் பலியானதோடு, 8,900ற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீயில் எறிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.