close
முகப்புஇரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு ?

இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு ?

October 12, 2017 268Views
இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு ?

குஜராத் சட்டப்பேரவையின் பதவி காலம் ஜனவரி 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல இமாச்சலபிரதேச சட்டப்பேரவையின் பதவி காலம் ஜனவரி 7ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இரு மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, நவம்பர் 9ஆம் தேதி ஒரே கட்டமாக இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். முதன்முறையாக பெண்களே முழுவதுமாக 136 வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவார்கள் என்றும் ஜோஷி கூறினார். அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் எனவும், வெப் கேமரா மூலம் தேர்தல் கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

குஜராத் மாநில தேர்தல் தேதி திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ஜோதி குறிப்பிட்டார். அதேபோன்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் ஜோதி அறிவித்தார்.