close
முகப்புஉடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை 

உடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை 

November 11, 2017 207Views
உடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை 

உசிலம்பட்டி பேருந்துநிலையம் அருகில் உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் அபாயகரமாக உடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ளது வண்டிப் பேட்டையிலிருந்து முக்கிய சாலைகளை குடியிருப்புகளுடன் இணைக்கும் மையப்பகுதியாக வண்டிப்பேட்டை நுழைவு வாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை மேல் அமைக்கப்பட்டுள்ள மினி பாலம் உடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. 

உடைந்த பாலத்திலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் குடியிருப்பேருக்கு டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றசாட்டுகின்றனர். அபாயகரமாக உடைந்தநிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.