close
முகப்புஉணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..!

உணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..!

October 13, 2017 362Views
உணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..!

உணவின்றி பட்டினி கிடப்போர் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு இந்தியா 97-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி 100வது இடத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 119 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 106 மற்றும் 107வது இடங்களில், இந்தியாவை காட்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

அதே நேரம் போரால் சீரழிந்த ஈராக் மற்றும் வங்கதேசம் இந்தியாவை விட பட்டினியை ஒழிப்பதில் முனைப்பு காட்டி முன்னேற்றமடைந்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.