close
முகப்புஉயர் ரக சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: வனத்துறையினர் தீவிர சோதனை

உயர் ரக சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: வனத்துறையினர் தீவிர சோதனை

November 24, 2017 152Views
உயர் ரக சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்: வனத்துறையினர் தீவிர சோதனை

உடுமலை அருகே மறையூரில் 20 லட்சம் மதிப்பிலான உயர் ரக சந்தன மரங்கள் வெட்டப்பட்டதையடுத்து, வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த தமிழக எல்லையான மறையூர் - எடக்கடவு பகுதியில், உயர் ரக சந்தன மரங்களை நள்ளிரவில் வெட்டி கடத்தி உள்ளனர். மூன்று மரங்களை வெட்டிய நிலையில், வெட்டப்பட்ட உயர் ரக  சந்தன மரங்களின் மதிப்பு இருபது லட்சத்திற்கு மேல் இருக்கும் என தெரிகிறது. 

இப்பிரச்சனையில் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா என்று, சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மூணாறு, இடுக்கி பகுதிகளுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.