close
முகப்புஉரிமைக்குழு நோட்டீஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உரிமைக்குழு நோட்டீஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

October 12, 2017 150Views
உரிமைக்குழு நோட்டீஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

உரிமைக்குழு நோட்டீஸ்க்கு எதிரான 21 தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் தொடர்ந்த வழக்கு 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குட்கா விவகாரத்தில் 21 தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக 21 எம்.எல்.ஏ.-க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இதனை எதிர்த்து  21 தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்நிலையில், தி.மு.க. தொடர்ந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் வழக்கு ஒத்திவைப்பால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.