close
முகப்புஎச் 1 பி  விசா நீட்டிப்பிற்கு தடை விதிக்கும் திட்டம் தற்போது இல்லை 

எச் 1 பி  விசா நீட்டிப்பிற்கு தடை விதிக்கும் திட்டம் தற்போது இல்லை 

January 10, 2018 279Views
எச் 1 பி  விசா நீட்டிப்பிற்கு தடை விதிக்கும் திட்டம் தற்போது இல்லை 

அமெரிக்காவில் எச் 1 பி  விசா நீட்டிப்பிற்கு தடை விதிக்கும் திட்டம் தற்போது இல்லையென அந்நாட்டு குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பணிப்புரியும் வெளிநாட்டினர்களுக்கு, எச் 1 பி விசா அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், அந்நாட்டு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து, பல்வேறு புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். 

இதன் ஒரு அறிவிப்பாக, எச்-1 பி விசா மூலம் வெளிநாட்டினர்கள் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கிய பிறகு,  க்ரீன் கார்ட் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு க்ரீன் கார்ட் வரும் வரை வெளிநாட்டினர் யாரும் அமெரிக்காவில் தங்கிருக்கக் கூடாது என்றும் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. 

இந்தநிலையில், இந்த புதிய அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க குடியேற்றத்துறையினர்,  எச் 1 பி  விசா நீட்டிப்பிற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என அறிவித்துள்ளனர்.