close
முகப்புஏம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் டிடிவி தினகரன்

ஏம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் டிடிவி தினகரன்

August 13, 2017 268Views
ஏம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் டிடிவி தினகரன்

அதிமுக-வின் இரு அணிகள் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதால், ஏம்.எல்.ஏ-க்களை தங்களது பக்கம் இழுக்க டிடிவி தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. 

அதிமுக 3 அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அம்மாஅணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சி தலைவி அம்மா அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

மேலும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டத்தில், தினகரன் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்நிலையில், தற்போது வரை தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 10 பேரையாவது பிடித்து விடவேண்டும் என அவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்வதாகவும், எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும்,  இவர்கள் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள பல எம்.எல்.ஏக்களை சந்தித்து தங்கள் அணிக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.