close
முகப்புஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

November 24, 2017 135Views
ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் செயல்படும் ஓ.என்.ஜி.சி எண்ணெய் கிணறுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

நன்னிலம் அருகேயுள்ள தென்னஞ்சாறு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்துள்ளதாகவும், அது குறித்து விவசாயிகளிடம் எவ்வித கருத்தும் கேட்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. 

மேலும், விளைநிலத்திற்கு மத்தியில், ஓ.என்.ஜி.சி கிணறு செயல்படுவதால் விளைச்சல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக கூறி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, விவசாயிகளுக்கு ஆதரவாக, தண்ணாநல்லூர், மாப்பிள்ளைக்குப்பம், ஆண்டிபந்தல், நன்னிலம் உள்ளிட்ட 40 கிராமங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை போக்குவரத்து வாகனங்களும் இன்று இயக்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி.க்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.