close
முகப்புகடலோர காவல் பணியில் மீனவ இளைஞர்கள், ஏடிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

கடலோர காவல் பணியில் மீனவ இளைஞர்கள், ஏடிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு

July 17, 2017 101Views
கடலோர காவல் பணியில் மீனவ இளைஞர்கள்,  ஏடிஜிபி சைலேந்திரபாபு  நேரில் ஆய்வு

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு குழுமத்தில் மீனவ இளைஞர்களை சேர்ப்பதற்கான முகாமை, ஏடிஜிபி சைலேந்திரபாபு பார்வையிட்டார்.

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 35 மீனவ இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு உடல் மற்றும்அறிவு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி சைலேந்திர பாபு, மீனவ இளைஞர்கள் மத்தியில், கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிற்து. இதனால் தமிழக அரசு சார்பில் படித்த மீனவ இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளித்து அவர்களை நாட்டை பாதுகாக்கும் பணியில் இணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். மேலும் இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பயன்களையும் சைலேந்திரபாபு எடுத்துரைத்துள்ளார்.