close
முகப்புகட்சியும், சின்னமும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும்

கட்சியும், சின்னமும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும்

September 22, 2017 140Views
கட்சியும், சின்னமும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும்

அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பன்னீர் செல்வம் தரப்பில் தனி அணி உருவானது. இரட்டை இலைச்சின்னம் மற்றும் கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தன. இந்தநிலையில் அண்மையில் இரு அணிகளும் இணைந்தன. 

இருப்பினும், சசிகலா தரப்பில் தினகரன் தரப்பில் ஒரு அணி உள்ளது. இந்தநிலையில், கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தரப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதுதொடர்பாக அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். அணிகள் இணைந்துவிட்டதாகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் இணைந்துவிட்டதாகவும், இணைப்பை பொதுக்குழு அங்கீகரித்து விட்டதால் கட்சியும் சின்னமும் தங்களுக்கே சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு விட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.