close
முகப்புகண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 

October 12, 2017 140Views
கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 

உளுந்தூர்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தால் சென்னை - திருச்சி நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

கரூர் காகித தொழிற்சாலையில் இருந்து , கண்டெய்னர் லாரி ஒன்று காகிதங்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில், திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, அவர் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.