close
முகப்புகர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிடை மாற்றம்

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிடை மாற்றம்

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிடை மாற்றம்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா, போக்குவரத்து ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிறையில் பல சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகாவும், அதற்காக டி.ஜி.பி சத்யநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக டி.ஐ.ஜி ரூபா புகார் தெரிவித்தார். இந்த குற்றசாட்டையடுத்து முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். பரபரப்பன அக்ரஹார சிறையில் நடந்த இந்த குற்ற சம்பவத்தை தைரியமாக வெளியிட்ட ரூபாவிற்கு நாடெங்கும் பல பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இவர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அவர் பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது 16 வருட காவல் பணியில் இது 31வது இடமாற்றமாகும். இதே போன்று டிஜிபி சத்யநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.