close
முகப்புகழிப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்

கழிப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்

August 04, 2017 69Views
கழிப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்கும் மாணவர்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் போதிய வகுப்பறைக் கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் கழிப்பறைகளில் அமர்ந்து பாடம் கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பள்ளி,  இதுவரை ஒரே ஒரு ஆசிரியரால் மட்டுமே நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. 

மாவட்டத்  தலைநகரான நீமுச்சில் இருந்து சுமார்  இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பள்ளியின் கட்டிட வசதி இல்லாதக் காரணத்தால், மாணவர்கள் அனைவரும் கழிப்பறைகளில் அமர்ந்து பாடம் பயிலும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

முன்னதாக கட்டிட வசதிகள் செய்துத் தருமாறு ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பள்ளி ஆசிரியர், பள்ளியில் போதிய கட்டடம் இல்லாததாலேயே  கழிப்பறைக்குள் வகுப்புகள் எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.