close
முகப்புகாட்டு யானைகள் அட்டகாசம்...பொதுமக்கள் அச்சம் 

காட்டு யானைகள் அட்டகாசம்...பொதுமக்கள் அச்சம் 

October 12, 2017 122Views
காட்டு யானைகள் அட்டகாசம்...பொதுமக்கள் அச்சம் 

வால்பாறை அருகே காட்டு யானைகளின் தொடரும் அட்டகாசத்தால், வீடுகள், சத்துணவு கூட கட்டடங்கள் சேதப்படுத்தப்படுவதாக  பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு அரசு உதவி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. நேற்று நள்ளிரவு நான்கு குட்டிகளுடன் எட்டு காட்டு யானைகள் உணவு தேடி இப்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. 

பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவரை இடித்து உள்ளே புகுந்த காட்டு யானைகள் சத்துணவு கூடத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை தின்று தூக்கி வீசி சேதப்படுத்தி உள்ளன. 

அங்கிருந்து வெளியேறிய யானைகள் அருகில் இருந்த குடியிருப்புக்குள் புகுந்தது. வீடுகளை சுற்றி வந்து முன்பக்கம் பின்பக்க கதவுகளை யானைக்கூட்டம் இடித்தது. இதனால் பீதியடைந்த மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து பொருட்களை வெளியே எடுத்துப் போட்டு நாசம் செய்தததாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

வனத்துறையினர் வந்த பின்னர், யானைகள் விரட்டியடிக்கப்பட்டன. தொடர்ந்து அதே பகுதியில் காட்டு யானைகள் சிறிய குட்டிகளுடன் முகாமிட்டிருப்பதால் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் வரலாம் என்று தொழிலாளர்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.