close
முகப்புகார் தலை கீழாக கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

கார் தலை கீழாக கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

November 24, 2017 173Views
கார் தலை கீழாக கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சோழவரம் அருகே மேம்பாலத்திலிருந்து கார் தலை கீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணமங்கலம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர், தமது மனைவி பவித்ரா, மாமனார் பழனி, மாமியார் நவநீதம் ஆகியோருடன் மீஞ்சூரில் நிச்சயதார்த்தம் நிகழச்சிக்கு சென்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். அவரது கார் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையின் மேம்பாலத்தில் வந்த போது, திடீரென  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், பவித்ரா, பழனி, நவநீதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் கந்தவேல், ஐயப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து, வண்டலூர் வெளிவட்ட சாலையின் மேம்பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்படாததே விபத்துக்கு காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டும் சாலையின் ஒப்பந்ததாரரும், அரசும் நடவடிக்கை எடுக்காததே 3 பேரின் உயிரிழப்புக்கு காரணம் என சொல்லப்படுகிறது.