close
முகப்பு கிரீன் கார்டு ஒதுக்கீடு 45% வரை உயர்த்த முடிவு என தகவல்

கிரீன் கார்டு ஒதுக்கீடு 45% வரை உயர்த்த முடிவு என தகவல்

January 13, 2018 246Views
 கிரீன் கார்டு ஒதுக்கீடு 45% வரை உயர்த்த முடிவு என தகவல்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படும் கிரீன் கார்டை பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி அதிபர் டிரம்பால் கையெழுத்திடப்பட்டு சட்டமாகி விட்டால், அது பன்முக விசா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரப்படும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் எதிர்காலத்தை பாதுகாக்கும் சட்ட மசோதா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, தற்போது ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கிரீன் கார்டுகள் வழங்குவதை 1 லட்சத்து 75 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்த்த வகை செய்கிறது.