close
முகப்புகீழ்மட்ட தொண்டர்களுக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை : ஓ. பன்னீர் செல்வம்

கீழ்மட்ட தொண்டர்களுக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை : ஓ. பன்னீர் செல்வம்

October 12, 2017 387Views
கீழ்மட்ட தொண்டர்களுக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை : ஓ. பன்னீர் செல்வம்

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அவருடன் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் சென்றனர். இன்று காலை 11.30 மணியளவில் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இனி கீழ்மட்ட தொண்டர்களுக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை எனவும்,  தமிழகத்தில் அதிமுக சார்பில் உள்ள காவி போஸ்டர்கள் வெறும் நிறங்களே, அதில் எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தா