close
முகப்புகுடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு

குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு

July 17, 2017 142Views
குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் நிறைவு

குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா, மாநில முதல்வர்கள், எம்.பிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் வாக்களித்து வருகின்றனர். 

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , கேரள சட்டப்பேரவை உறுப்பினர் பறக்கல் அப்துல்லா, உட்பட அதிமுக அம்மா அணி, புரட்சி தலைவி அம்மா அணி, திமுக காங்கிரஸ், இந்திய யூனியன முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். இதனையடுத்து தமிழகத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.