close
முகப்புகுடியிருப்புப் பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து 

குடியிருப்புப் பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து 

October 12, 2017 117Views
குடியிருப்புப் பகுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து 

டெல்லியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த  விபத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர்.

டெல்லியின் கீதா நகர் பகுதியில் உள்ள, குடியிருப்புப்  பகுதிகளில் உள்ள வீடு ஒன்றில், சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதனையடுத்து, சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அச்சத்துடன் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர். 

இந்த சிலிண்டர் வெடித்ததால்,வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து இருசக்கர வாகனம்  ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.