close
முகப்புகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை: உ.பி அரசு அதிரடி 

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை: உ.பி அரசு அதிரடி 

October 09, 2017 98Views
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு சிறை: உ.பி அரசு அதிரடி 

உத்தரபிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அடைக்கப்படுவார்கள் என அம்மாநில அமைச்சர் ராஜ்பர் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அம்மாநில அமைச்சர் ராஜ்பர் மக்களிடையே உரையாற்றினார். அப்போது பள்ளிப்பருவ குழந்தைகளை பெற்றோர்கள் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார். 

அவ்வாறு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் 5 நாட்கள் உணவு, தண்ணீர் கூட இல்லாமல் காவல் நிலையத்தில் அடைக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகளவு குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாகவும் இதனைத் தடுக்க பள்ளிவயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு கட்டாயம் அனுப்புவத்ற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் ராஜ்பர் தெரிவித்துள்ளார்.